உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளம் சீரமைப்பு!

காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளம் சீரமைப்பு!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் குளம், 28 லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைக்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதுாரில், 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. ராமானுஜர் அவதார தலமாக இக்கோவில் உள்ளதால், இங்கு பெருமாளுக்கும், ராமானுஜருக்கும் தனித்தனியாக உற்சவம் நடத்தப்படுகிறது.

இக்கோவிலின் அனந்தசரஸ் குளம், பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால், படித்துறைகள் சிதிலம் அடைந்து காணப்பட்டன. மேலும், குளத்தின் நடுவிலிருந்த, நீராழி மண்டபமும் அதிலுள்ள சிற்பங்களும் சிதிலமடைந்து காணப்பட்டன. இதையடுத்து, இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கேரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், குளத்தை தனியார் பங்களிப்பில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. இதுகுறித்து, கோவில் தரப்பில் கூறுகையில், இந்த குளத்தை சீரமைக்கும் பணிகள், தனியார் பங்களிப்பில் நடந்து வருகின்றன. ஆறு மாதங்களில் சீரமைப்பு பணிகளை முடிக்க, திட்டமிட்டு உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !