உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் விநாயகருக்கு 108 கலசாபிஷேகம்!

மேட்டுப்பாளையம் விநாயகருக்கு 108 கலசாபிஷேகம்!

மேட்டுப்பாளையம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராஜ அஷ்ட விமோசன மகா கணபதிக்கு, 108 கலசாபிஷேகம் செய்யப்பட்டது.மேட்டுப்பாளையம் அடுத்த ஆசிரியர் காலனி, ரங்கராஜன் லே அவுட்டில் ஸ்ரீ ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவில் உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மகா கணபதி பூஜையும், ஹோமமும் செய்யப்பட்டது. தொடர்ந்து, 108 கலசாபிஷேகமும், மகா பூர்ணாகுதியும், மகாஅபிஷேகமும் செய்யப்பட்டது. பின்னர், இரட்டை விநாயகர் சுவாமிக்கு, அலங்காரத்துடன் கூடிய, சகஸ்ரநாம அர்ச்சனை, உபசார பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில், கோவில் நிர்வாகக்குழுவினர், ஆசிரியர் காலனி, ரங்கராஜன் லே அவுட், சிவன்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !