மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
3667 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
3667 days ago
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 48 லட்சம் ரூபாயும், 247 கிராம் தங்கமும், 380 கிராம் வெள்ளியும் இருந்தன.
மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவிலில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் காணிக்கை எண்ணிய போது, 29 லட்சத்து, 47 ஆயிரத்து 811 ரூபாயும், 202 கிராம் தங்கமும், 148 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.
பல்வேறு அலுவலக பணிகள் காரணமாக மூன்று மாதங்களுக்கு பிறகு, 18.9.15-ல் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மருதமலை கோவில் துணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் முன்னிலையில், ஆய்வாளர் பால்ராஜ், கோவில் ஊழியர்கள் நெல்லையப்பன், திருநாவுக்கரசு, ஆனந்த், நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, 25 மாணவியர், அவிநாசி விஷ்ணு சேவைக் குழுவினர், 60 பேர், மேட்டுப்பாளையம் ஆலய தெய்வீக நற்பணிக்குழுவினர். 20 பேர் மற்றும் கோவில் ஊழியர்கள் என, 120 பேர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் 48 லட்சத்து 62 ஆயிரத்து 192 ரூபாயும், 247 கிராம் தங்கமும், 380 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஆடிக்குண்டம் திருவிழா நடந்ததால், கடந்த முறையை விட இந்த முறை 19 லட்சத்து 14 ஆயிரத்து 381 ரூபாய் கூடுதலாக உண்டியல் காணிக்கை கிடைத்தது.
3667 days ago
3667 days ago