உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

ப.வேலூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

ப.வேலூர்: ப.வேலூர், குட்டுக்காட்டில் காவிரி ஆஞ்சநேயர், காவிரி விநாயகர் கோவில்கள்
உள்ளன. கோவில் திருப்பணி மிகுந்து பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள்
அனைத்தும் முடிந்த நிலையில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவை
முன்னிட்டு, 18.9.15 முன்தினம் காலை, 7 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித
நீராடி தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். அன்று மாலை, 6 மணிக்கு, வாஸ்து சாந்தி, முதல்கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.

18.9.15 காலை, 7.30 மணிக்கு, காவிரி விநாயகர், காவிரி ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில்
கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து ஸ்வாமி தரிசனம், சிறப்பு அபிஷேகம், ஆராதனை
நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பொத்தனூர் செல்வ விநாயகர், கருப்பண்ணசுவாமி மற்றும் சக்தி நகர் சக்தி விநாயகர்
கோவிலில், காரியசித்தி விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், சுற்று
வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !