திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் 19.9.15 புரட்டாசி சனி உற்சவம்!
ADDED :3669 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் 19.9.15 புரட்டாசி சனி உற்சவம் துவங்குகிறது. 18.9.15 புரட்டாசி பிறப்பை முன்னிட்டு பகல் 11 மணிக்கு மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு காலை 7 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், காலை 10 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், மாலை 6 மணிக்கு நாம சங்கீர்த்தன பஜனை, இரவு 8 மணிக்கு திருவீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து, செப்.26, அக்.3, செப்.10, செப்.17 ஆகிய சனிக்கிழமைகளிலும் உற்சவம் நடைபெறும்.