தஞ்சாவூர் விநாயகர் சிலைகள் 59 இடங்களில் பிரதிஷ்டை!
தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தஞ்சை நகர் பகுதியில், 59 இடங்களில்
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் விஸ்வரூப விநாயகர்
சதுர்த்தி விழாக்குழு சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். தொடர்ந்து, மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் விசர்ஜனம் செய்யப்படும். குறிப்பாக, தஞ்சை கீழவாசல் சின்ன அரிசிக்காரத் தெரு, செல்லியம்மன் கோயில் தெரு, சித்தர் மடம், கரந்தை மார்க்கெட், கரந்தை தமிழ் சங்கம், வண்டிப்பேட்டை, பழைய பஸ் ஸ்டாண்ட், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, உஜ்ஜையினி மகாளி அம்மன் கோயில் தெரு, டபீர் குளம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சிலைகள், நாளை விசர்ஜனம் செய்யப்பட உள்ளன. அதுவரையில், சிலை இருக்கும் இடங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.