உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை!

வெற்றி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை!

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மந்தாரக்குப்பம்  வெற்றி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. 17ம் தேதி கணபதி ேஹாமம் செய்து,  11 அடி உயரத்தில் மகா கணபதி பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடந்தது. 18ம் தேதி வெற்றி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர்  போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.  மாலை 6:00 மணியளவில் நடந்த  திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். 19ம் தேதி  விநாயகருக்கு பாலாபிஷேகம் நடந்தது.  இன்று (21ம் தேதி) 1,008 கொழுக்கட்டை வைத்து சிறப்பு பூஜை, வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி மற்றும் இந்து  முன்னணியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !