ராமேஸ்வரத்தில் மகா ருத்ர யாகம்!
ADDED :3667 days ago
ராமேஸ்வரம்: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் மகா ருத்ர யாகம் நடந்தது. உலக நன்மை வேண்டி 121 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க 11 புண்ணிய தலங்களில் பூஜித்த சிவ லிங்கத்திற்கு சிற ப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சாய் ஆன்மிக நிர்வாகிகள் சீனிவாச சர்மா, நஞ்சுண்ட தீட்சிதர், பள்ளி தாளாளர் சுவாமி சாரதானந்தா பங்கேற்றனர்.