விநாயகர் சிலை ஊர்வலம்: முஸ்லிம் பிரமுகர் துவக்கி வைப்பு!
ADDED :3780 days ago
குமராட்சி: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக குமராட்சியில் விநாயகர் சில ஊர்வலத்தை முஸ்லிம் ஒருவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். சிதம்பரம் அடுத்த குமராட்சி ஸ்ரீ பொய்யுறையார் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய ப்பட்டது. அப்பகுதி மக்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். பூஜைகள் முடிந்து கடலில் விஜர்சனம் செய்வதற்காக வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக புறப்பட்டது. ஊர்வலத்திற்கு வர்த்தக சங்கத் தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அப்துல் ரவூப் ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய சேர்மன் பாண்டியன் பங்கேற்றார். வரதராஜன், சாமிநாதன், கண்ணன், வேலப்பன், மணி, மோகன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.