உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யலூர் கோயிலில் அன்னதானம் துவக்கம்

அய்யலூர் கோயிலில் அன்னதானம் துவக்கம்

வடமதுரை : ஒன்றியத்தில் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மட்டும் அன்னதான திட்டம் செயல்பாட்டில் இருந்து வந்தது. இங்கு கடந்த 2011 செப்டம்பரில் இருந்து நாள்தோறும் மதியம் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தற்போது அய்யலூர் தங்கம்மாபட்டி வண்டி கருப்பணசுவாமி கோயிலிலும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் மதியம் 25 பேருக்கு அன்னதானம் வழங்க அறநிலையத்துறை அனுமதி தந்துள்ளது. இதற்கான துவக்க விழாவில் செயல் அலுவலர் வேலுச்சாமி, வேடசந்தூர் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகையா, பரம்பரை அறங்காவலர் ரெங்கநாதன், வெள்ளபொம்மன்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் குப்பாச்சி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !