உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா கொடியேற்றம்!

திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா கொடியேற்றம்!

பரமக்குடி : பரமக்குடி திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும் திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு பூசாரி வாலா குடும்பத்தினர், கருட கொடியுடன் மேள தாளம் முழங்க வீதிவலம் வந்தனர். பகல் 11 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கருட கொடியை அர்ச்கர் சத்யா ஏற்றினார். நாளை (செப்., 25) காலை 9.30 க்கு அம்மன் திருக்கல்யாணம், செப்., 27 ல் அர்ச்சுணன் தபசு நிலை, செப்.,29, 30 ல் பீமவேசம், அக். 1 ல் சக்கர வாரிக்கோட்டை, மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு அரவான் களப்பலி நடக்கவுள்ளது. அக்.,4 ல் மாலை 4 மணிக்கு காளி வேடத்துடன் புறப்பட்டு சபதம் முடிந்த பின், வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து, மாலை 6 மணிக்கு மேல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து பால்குடம், பட்டாபி ஷேகம், அம்மன் வீதிவலம் தொடர்ந்து நடைபெறும். ஏற்பாடுகளை திரவுபதி அம்மன் கோயில் பக்த சபை மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !