உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி பகுதியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்!

கோத்தகிரி பகுதியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்!

கோத்தகிரி: கோத்தகிரி அனுமன் சேனா சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகரம் மற்றும் கிராமபுற ங்களில் கடந்த, 16ம் தேதி வைக்கப்பட்ட, 30 சிலைகள், கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை, 3:30 மணியளவில்  ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்த ஊர்வலம், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், காம்பாய் கடை, ராம்சந்த் வழியாக,  கொண்டுச்செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு, அனுமன் சேனா மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி ஸ்ரீதர்ஜி சிறப்பு  விருந்தினராக பங்கேற்றார். பின்பு, உயிலட்டி நீர் வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !