கோவில் திருப்பணிகள் முடியாததால் 20 ஆண்டுகளாக விழாக்கள் இல்லை
தட்டாஞ்சாவடியில் முத்துமாரியம்மன், கெங்கையம்மன், சுந்தர விநாயகர் கோவில் திருப்பணி முடியாததால் 20 ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்தவில்லை. புதுச்சேரி தட்டாஞ்சாவடி குண்டுதாங்கி அய்யனாரப்பன் கோவில், சுந்தரவிநாயகர், கங்கையம்மன் கோவில், முத்து மாரியம் மன் கோவில்களை, புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய தட்டாஞ்சாவடி மக்கள் முடிவு செய்தனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி கள் துவங்கியது. துவங்கிய சில மாதத்திலேயே பணிகள் பாதியில் நின்றது.மக்கள் அளித்த நன்கொடைகள் மூலம் குண்டுதாங்கி அய்யனாரப்பன் கோவில் திருப்பணி மட்டும் முடிந்து, கும்பாபிஷேகம் நடத்தும் நிலைக்கு வந்தது.ஆனால், கெங்கையம் மன், முத்துமாரியம்மன் மற்றும் தட்டாஞ்சாவடி மெயின்ரோட்டில் உள்ள சுந்தரவிநாயகர் கோவில் கள் திருப்பணி முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது.திருப்பணிகள் முடியாததால், கடந்த 20 ஆண்டுகளாக தட்டாஞ்சாவடி கோவில்களில் விழாக்கள் நடத்தவில்லை.கோவில்களின் சொத்தை விற்றதில் கிடைத்த 2.6 கோடி ரூபாய், கோவில் பெயரில் டிபாசிட் செய்தது குறிப்பிடத்தக்கது.
மூதாட்டி தனம் கூறுகையில், முத்துமாரியம் மன், கங்கை யம்மன் கோவில்களில் திருவிழாக் கள் வெகு விமர்சையாக நடக்கும். கோவில்களின் திருப்பணி முடியாததால், 20 ஆண்டுகளாக திருவிழா நடக்கவில்லை. கோவில் கட்ட ஒற்றுமையாக முன் வரவில்லை. முதல்வர் ரங்கசாமி, இந்த கோவில்களை கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்ய உதவி செய்ய வேண்டும் என்றார். அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் கூறுகையில், குண்டுதாங்கி அய்யனாரப்பன் கோவில் திருப்பணி மேற்கொள்ள புதிய திருப்பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. புதிய திருப்பணிக்குழு, திருப்பணிக்கான திட்டம் தயாரித்து துறையிடம் அளித்த பின்பு, திருப்பணிக்கு தேவையான நிதி வழங்கப்படும். மக்களும் தாராளமாக நன்கொடை வழங்கி கோவில் திருப்பணியை மேற்கொள்ளலாம் என்றார்.