வேத மந்திரங்கள் முழங்க.. பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமி உடல் நல்லடக்கம்!
ADDED :3666 days ago
ரிஷிகேஷ்: பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமியின் உடல் நேற்று, வேத மந்திரங்கள் முழங்க ரிஷிகேஷ் கங்கைக்கரையில் உள்ள ஆசிரமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. துறவிகள், மடாதிபதிகள், சீடர்கள், பக்தர்கள் ஏராளமானோர், சுவாமிக்கு அஞ்சலி செலுத்தினர். ஆன்மிக குரு, பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி, 85, உலகம் முழுவதும் இந்து தர்மத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். பல்வேறு மடங்கள், அமைப்புகளை நிறுவி, சமூகப்பணிகளை மேற்கொண்டு வந்த அவர், கலாசாரத்தை பாதுகாக்கவும், வெவ்வேறு மதங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், சமூகத்தில் கடைநிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யவும், பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார்.