உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம்

விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம்

திருத்தணி: செல்வ விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம், மண்டலாபிஷேக விழா நடந்தது. திருத்தணி அடுத்த, பட்டாபிராமபுரம் கிராமத்தில், புதிதாக செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டு, கடந்த, 17ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, நேற்று முன்தினம் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.இதில் கலந்து கொண்ட, திரளான பெண்கள், கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில், பஜனை குழுவினரின் பாடல்கள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !