உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியமங்கலம் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்!

சத்தியமங்கலம் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்!

செஞ்சி: சத்தியமங்கலம் கோதண்டராமர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் கோதண்டராமர் கோவிலில்  புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவாடை உற்சவம் நடந்தது. காலை 7 மணிக்கு சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமரு க்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன்,  ராஜகோபலனார் அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவருக்கு காலை 8  மணி முதல்10 மணிவரை திருப்பாவாடை உற்சவம் நடந்தது. திருப்பாவாடை பிரசாரம் பக்தர்களுக்கு வழங்கினர். ராமச்சந்திரன், குமார்  பட்டாச்சாரியார்கள் தலைமையில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கேட்டவரம் பாளையம் பஜனை கோஷ்டியினரின் ராம நாமாவலி பஜனை  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !