உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி ஊஞ்சல் சேவை!

சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி ஊஞ்சல் சேவை!

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் ராதா   ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ராதா, ருக்மணி கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம்  நடந்தது. பகல் 1:00  மணிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.  இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் யாதவ சமூகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !