கோயில் தூய்மைப்படுத்தும் பணி
ADDED :3672 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியின் வரலாற்று துறை பாரம்பரிய மன்றம் சார்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்படும் களப் பணிகளில் ஒன்றாக, அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் உள்ள வாழவந்தம்மன் கோயிலை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. அங்கு வளர்ந்திருந்த முட் செடிகள், குப்பை அப்புறப்படுத்தப்பட்டன. வரலாற்று துறை தலைவர் பூவை, பேராசிரியர்கள் சந்திரசேகரன், செல்லப்பாண்டியன் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு கோயில் டிரஸ்டிகள் நன்றி தெரிவித்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன் செய்தார்.