உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களுக்கு பூஜை பொருட்கள்

கோவில்களுக்கு பூஜை பொருட்கள்

ஊட்டி: மாநில அரசு திட்டத்தின் கீழ், நீலகிரி கிராமப்புறங்களில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள, 32 கோவில்களுக்கு, துாப கால், தொங்கு விளக்கு, கார்த்திகை விளக்கு, மணி, பித்தளை தாம்பாளம் உட்பட பூஜைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி.,அர்ஜூனன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் தனசேகர், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !