உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா அவதார தின விழா!

ஷீரடி சாய்பாபா அவதார தின விழா!

காஞ்சிபுரம்: ஷீரடி சாய்பாபாவின் அவதார தின விழா, நேற்று, சின்ன காஞ்சிபுரம், திருவீதிபள்ளம் பகுதியில், வெகு விமரிசையாக நடைபெற்றது.  சின்ன காஞ்சிபுரம், திருவீதிபள்ளம் பகுதியில் உள்ள சத்தியசாய் சேவா நிலையத்தில், நேற்று, ஷீரடி சாய்பாபா அவதார தின விழா சிறப்பாக  நடைபெற்றது.  இதில், நேற்று, காலை 9:00 மணியளவில், அவரது முழு உருவ சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து,  புட்டபர்த்தி சாய்பாபா பிரசாந்தி நிலையத்தில், வரும் அக். 15 முதல், நவ. 15 வரை, நடைபெற உள்ள சேவை குறித்து பக்தர்களுக்கு விளக்கம்  அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !