திருக்கோஷ்டியூர் கோயில் விமானம்: தாமிரத்தகடு பொருத்தும் பணி மும்முரம்!
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் விமானத்தில் தங்க கவசம் பொருத்துவதற்கான திருப்பணி மும்முரமாக நடைபெறுகிறது. இக்கோயிலில் 2017ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தற்போது விமானத் திருப்பணி விரைவாக நடைபெற்று வருகிறது. மதுரை எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் விமானத்தில் தாமிரத்தகடு பதிக்கும் பணியில் உள்ளனர். 4 அடி உயர ராமானுஜர், எட்டு சிம்ம வாகனங்கள், எட்டு கந்தர்வர்கள் , நான்கு கருடாழ்வார், ஸ்ரீதேவிபூதேவியருடன் பெருமாள், லெட்சுமி வராஹர், லெட்சுமி நரசிம்மர் உள்ள உருவங்களை தாமிரத்தால் வடிவமைத்து வருகின்றனர். 14 வர்க்கத்தகடாலான அடுக்கில் 8 நாசித்தலைகளுடன் விமானம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 4 டன் எடையுள்ள தாமிரம் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தற்÷ பாது சுமார் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளது. அடுத்து சில மாதங்களில் தகரத் தகடுபதிப்பு பணிகள் முடிந்த பின்னரே, தங்கத் தகடு பதிப்பது குறித்து மதிப்பிடப்படும்’ என்றார்.