மீனாட்சி கோயிலில் போட்டோ உரிமம் வழங்க டெண்டர்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுற்றுலா பயணிகள், பக்தர்களை புகைப்படம் எடுக்கும் உரிமம் வழங்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: இக்கோயிலுக்குள் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் உடனடி புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் புகைப்படம் எடுத்து வழங்க, 2 நபர்களை 6 மாதத்திற்கு மட்டும் ஒப்பந்தம் செய்து உரிமம் வழங்கப்படும். இதற்கான டெண்டர் திறப்பு அக்.,12 மதியம் 12.30 மணிக்கு அலுவலகத்தில் நடக்கிறது.டெண்டரில் கலந்து கொள்ள விரும்புவோர், கோயிலில் படிவம் பெற்று பூர்த்தி செய்து, ரூ. 10 ஆயிரம் முன்வைப்பு தொகையை இணை கமிஷனர்/செயல் அலுவலர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்ற பெயரில் வங்கி வரைவோலை இணைக்க வேண்டும். அன்று மதியம் 12 மணிக்குள் டெண்டர் பெட்டியில் போட வேண்டும் டெண்டர் விபரங்களை கோயில் அலுவலகத்தில் பெறலாம், என தெரிவித்துள்ளார்.