உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் காளிகோயிலில் ஆடி வெள்ளியில் அலைமோதிய கூட்டம்!

மடப்புரம் காளிகோயிலில் ஆடி வெள்ளியில் அலைமோதிய கூட்டம்!

திருப்புவனம் : ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று கோயில்களில் வழிபட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மடப்புரம் காளிகோயிலில் நேற்று முதல் வெள்ளியையொட்டி வேண்டுதல் செய்யும் பக்தர்கள் காலை 5 மணியிலிருந்து வரத் துவங்கினர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வேண்டுதல் செய்து பாதயாத்திரையாக வருவது அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்றும் அதிகளவில் பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர்.உச்சி கால பூஜையில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். மதுரை, சிவகங்கையிலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் சுபகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !