ஆக.1ல் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேரோட்டம்
ADDED :5230 days ago
திருவாடானை : திருவாடானை கோயில் தேரோட்டம் ஆக.,1ம் தேதி நடக்கிறது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், சினேகவல்லி தாயார் ஆடிப்பூரத்திருவிழா நாளை (ஜூலை 24) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.,1ம் தேதி மதியம் 3 மணிக்கு நடக்கிறது. சினேகவல்லி தாயார் அமர்ந்த தேர் முக்கிய வீதி வழியாக வலம் வரும். 3ம் தேதி அம்பாள் தவசும், ரிஷப வாகனத்தில் காட்சியளித்தலும், 4ம் தேதி திருக்கல்யாணம் காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் நடைபெறும். 6ம் தேதி சுந்தரர்கைலாச காட்சி நடைபெறும். விழா நாட்களில் காமதேனு, அன்னம், குதிரை, கிளி, கமலம் போன்ற பல வாகனங்களில் சிநேகவல்லிதாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் 22 கிராமத்தினர் செய்து வருகின்றனர்.