உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் கோவிலில் கருட வாகனம்!

தீவனூர் கோவிலில் கருட வாகனம்!

திண்டிவனம்: தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், 3.10.15 கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

திண்டிவனம் அடுத்த தீவனூர் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை உற்சவம் நடக்கிறது. இதையொட்டி,  காலை 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து வெள்ளி கவசத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார்.

மாலை 6:00 மணிக்கு, கருட வாகனத்தில் ஆதிநாராயண பெருமாள் அலங்காரத்துடன், மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா முனுசாமி செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !