உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புகழிமலையில் கிருத்திகை விழா!

புகழிமலையில் கிருத்திகை விழா!

வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், தயிர், திருநீறு உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால், சிறப்ப அபிஷேகம் நடந்தது.

பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். அதன் பின், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !