உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகதுருகம் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்!

தியாகதுருகம் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்!

தியாகதுருகம்: தியாகதுருகம், சீனுவாசபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தியாகதுருகம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச  பெருமாளுக்கு புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையை முன்னிட்டு, திருமஞ்சன விழா நடந்தது. காலையில் மூலவர் சுவாமிக்கு அபிஷேக  ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருத்தளிகை வழிபாடு நடந்தது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண  உற்சவத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சர்வ அலங்காரத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சீனுவாச  பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து  ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜிலு, பிச்சாண்டிப்பிள்ளை, முருகன், நல்லாப்பிள்ளை,  அபரஞ்சி, ராதாகிருஷ்ணன், கண்ணன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !