பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்!
ADDED :3855 days ago
வாலாஜாபாத்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், மூன்றாம் சனிக்கிழமை உற்சவம் கோலாகலமாக நடந்தது.படுநெல்லி கிராமத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை, புரட்டாசி உற்சவம் மற்றும் திருப்பதி நடைபாதை பயணம் துவங்கும். நடப்பாண்டு, மூன்றாம் சனிக்கிழமையை ஒட்டி, நேற்று முன்தினம், காலை, 10:00 மணி அளவில், பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணி அளவில் பெருமாளுக்கு காப்பு கட்டிய பக்தர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை பயணத்தை துவக்கினர். நேற்று முன்தினம், இரவு, 8:00 மணி அளவில், பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.