உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் 2017ல் கும்பாபிஷேகம்!

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் 2017ல் கும்பாபிஷேகம்!

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் 2017 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 108 வைணவத் தலங்களில் முதன்மையானது திருக்கோஷ்டியூர். மூன்றடுக்கிலான இக்கோவிலில் புகழ் பெற்ற அஷ்டாங்க திவ்யவிமானம் உள்ளது. இக்கோவிலில் 1996, 2004ம் ஆண்டு களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பின்னர் கடந்த 2008ல் அஷ்டாங்க விமானத்திற்காக தங்கத் தகடு பதிக்க பாலாலயம் நடந்தது. தற்போது விமானத்திருப்பணியுடன், கோவில் முழுமைக்குமான திருப்பணியும் சேர்ந்து நடைபெற சிவகங்கை சமஸ்தான தேவஸ் தானம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பாலாலயம் விரைவில் நடத்த ஆலோசிக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை 2017ம் ஆண்டு தை மாதத்தில் நடத்தவும் முடிவாகியுள்ளது. திருப்பணிகள்: இத்திருப்பணியில் கோவிலின் கூரைகளில் தட்டோடு பதித்தல், கற் வேலைப்பாடுகளில் "கெமிக்கல் வாஷ், கோபுர சுதைகள் புதிப்பிப்பு, கல்தூண், கல் மண்டப விரிசல்கள் பராமரிக்கப்பட உள்ளது. மேலும் புதிதாக மழைநீர் மற்றும் அபிஷேக நீருக்கு தனி வடிகால் வசதி, சோலார் மின் விளக்கு, கோவில் முழுவதும் மின் அலங்கார விளக்கு வசதிகள், பக்தர்கள் வரிசையில் செல்ல, 3 வழிகளில் நிரந்தரமான வரிசைக்கம்பிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !