உளுந்தூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்!
ADDED :3689 days ago
உளுந்தூர்பேட்டை: புகைப்பட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, புகைப்பட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. கடந்த மாதம் 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று முதல் 8 நாட்கள் சுவாமிக்கு சிற ப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதியுலா நடந்தது. நேற்று மதி யம் 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. தேரோட்டத்தில் ÷ காலாட்டம், சிலம்பாட்டம், கும்மியடித்து வலம் வந்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.