உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் வரதராஜ பெருமாளுக்கு திருப்பதி அலங்காரம்!

விழுப்புரம் வரதராஜ பெருமாளுக்கு திருப்பதி அலங்காரம்!

விழுப்புரம்: கோலியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் திருப்பதி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கோலியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை 8:00 மணிக்கு வரதராஜ பெருமாள், திருப்பதி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருப்பாவாடை சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !