உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெருங்குகிறது நவராத்திரி: கொலு பொம்மைகள் தயார்

நெருங்குகிறது நவராத்திரி: கொலு பொம்மைகள் தயார்

திண்டுக்கல் : நவராத்திரி அக்.,12ல் நடக்க உள்ளது. அபிராமி அம்மன் கோவில் தெரு சர்வோதய சங்கம் காதிபவன் கடையில் ஏராளமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மதுரை, காஞ்சிபுரம், கடலூர், பாண்டிச்சேரியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இதில் விநாயகர், முருகன், குபேரன், ஆதிசங்கரர், தசாவதாரம், கயிலாய சிவன், பஞ்ச பாண்டவர்கள், கல்யாண சேட், மளிகை கடை சேட் என விதவிதமாக உள்ளன. இவை களிமண்ணால் தயாரிக்கப்பட்டு இயற்கை வண்ணம் பூசப்பட்டவை. ஒரு பொம்மையின் விலை ரூ.60 முதல் ரூ.650 வரை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !