அவலூர்பேட்டையில் திருத்தளிகை மகோற்சவம்
ADDED :3862 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருத்தளிகை கண்டருளல் மகோற்சவம் நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஏரியில் ஆணைக்கல்லில் அமைந்துள்ள ராமதூத ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருத்தளிகை கண்டருளல் மகோற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் கிராம மக்களும் , அடியார் குழாங்களும் கலந்து கொண்டனர்.