உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரத்தில் பிரசித்தி பெற்ற கால பைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரம்மா, இந்திரனால் பிரிதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ காலபைரவர்,தீப்பிழம்பு, செம்பட்டைமுடி,மூன்று கண்கள், அகோர பற்கள், ஆனந்தமான பார்வையுடன், தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் பூஜைகள் சிறப்பு வாய்ந்தது. இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமி அன்று நடைபெறும், அபிஷேகத்திற்கு பிறகு வழங்கப்படும் எண்ணெய் சூலக்கட்டு வியாதியை போக்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைகளை குப்புஸ்வாமி சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். அஷ்டமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள இந்திர தீர்த்தத்தில் நீராடி காலபைரவரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சூலக்கட்ட வியாதிக்கான எண்ணெய்யை வாங்கியதுடன், குடும்பம், ஆயுள் விருத்திக்கு தேங்காய், பில்லி சூன்யம் அகல பாகற்காய், வாஸ்து, கோ, பிதுர் தோஷம் நீங்க பூசணி காய்களிலும் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !