ஜலக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா!
ADDED :3664 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளை யம் அருகே உள்ள காளிபாளையம் கிராமத்தில் ஜலக்கண் மாரியம்மன் கோவில், 35வது ஆண்டு விழா நடந்தது. பூச்சாட்டுடன் துவங்கிய விழாவையொட்டி, பூவோடு எடுத்தல், கரகம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, அலகு குத்தி தேர் இழுத்தல், பொலி காளை ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா நடந்தன. விழா நிறைவாக, ஜலக்கண் மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, மருதப்பகவுண்டர் தலைமையில் ஊர்பொதுமக்கள் செய்து இருந்தனர்.