பழநி மலைக்கோயிலில் தங்கரதம் 10 நாட்கள் நிறுத்தம்!
ADDED :3659 days ago
பழநி,:நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் பத்து நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட உள்ளது.பழநி மலைக்கோயிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்குமேல், தங்கரதப்புறப்பாடு நடக்கிறது. கந்த சஷ்டி, பெரியகார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி போன்ற விழாக் காலங்களில், மலைக்கோயிலில் தங்கரதப் புறப்பாடு நிறுத்தப் படும். அதன்படி இவ்வாண்டு நவராத்திரி விழாவிற்காக அக்.,13ல் முதல் அக்.,22 வரை (10 நாட்கள்) தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட உள்ளது. அதன்பின் வழக்கம் போல் இரவு 7 மணிக்கும் தங்கரத புறப்பாடு நடைபெறும் என, கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.