உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொலு பொம்மை விற்பனைக்கு வந்தாச்சு!

கொலு பொம்மை விற்பனைக்கு வந்தாச்சு!

திருப்பூர்: நவராத்திரி விழாவுக்காக, திருப்பூருக்கு விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. நவராத்திரி விழா, 13ல் துவ ங்குகிறது. வீடு, கோவில்களில், கொலு வைத்து, தொடர்ந்து ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜை நடத்துவது வழக்கம். சர்வோதயா சங்கங்கள், கடைகள்,  தள்ளுவண்டிகளில், கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிவன், முருகன், குழந்தை கிருஷ்ணர், விநாயகர், நந்தி, மாரியம்மன்,  குபேரன் போன்ற தெய்வங்களின் தனித்தனி பொம்மைகள்; அசோகவனத்தில் சீதை, பள்ளிகொண்ட பெருமாள், திருமண ‘செட்’, கிரிவலம் வருதல் போன்ற தலைப்புகளில், கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. குறைந்தபட்சம், 60 முதல், அதிகபட்சம், 22 ஆயிரம் ரூபாய்  வரையிலான பொம்மைகள் வந்துள்ளன. கொலு பொம்மைகளை தேர்வு செய்து வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !