உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பராமரிப்பற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் குளம்!

பராமரிப்பற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் குளம்!

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் குளம், பராமரிப்பின்றி சீரழிந்து வரும் அவலம், பக்தர்களிடம் அதிருப்தியை  ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் குளம், 2 ஏக்கர் பரப்பளவில், மைய பகுதியில், 25 ச.அடி., பரப்பு நீராழி  மண்டபத்துடன் உள்ளது. நீரூற்று மணற்பரப்பில் அமைந்த குளம், 25 ஆண்டுகளுக்கு முன், ஆண்டு முழுவதும் நீர் நிரம்பியே காணப்படும். பல  ஆண்டுகளாக, குளத்தைச் சுற்றி கட்டடங்கள் பெருகி, மழைநீர் வரத்து பாதைகள் அடைபட்டு, குளத்தின் நீர்வரத்து தடைபட்டும், துார்ந்தும், சேறும்  சகதியுமாகவும் உள்ளது. மழையின்போது தேங்கும் நீர், ஓரிரு மாதங்களில் வறண்டு விடுகிறது. கொடிகள் படர்ந்த அலங்கோலம்; வறட்சியில்,  கொடி மக்கி, மீன்கள் இறந்து துர்நாற்றம் என, சீரழிந்து வருகிறது.குளத்தை பராமரிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்படி, பக்தர்கள் ÷ வண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !