உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலுக்கு அகோபிலமடம் ஜீயர் விசிட்!

பெருமாள் கோவிலுக்கு அகோபிலமடம் ஜீயர் விசிட்!

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பெருமாள் கோவிலுக்கு அகோபிலமடம் ஜீயர் வருகை தந்தார். விழுப்புரம் மாவட்டம், தி ருவெண்ணெய்நல்லுார், வைகுண்டவாசக பெருமாள் கோவிலுக்கு, அகோபில மடம் 46வது பட்ட ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர்சுவாமிகள் நேற்று  வருகை தந்தார். ஸ்ரீரங்கம் தசாவதார கோவிலில் மங்களாசாசனம் செய்து, சென்னை சேலையூர் செல்லும் வழியில் நேற்று மதியம் 2:00 மணிக்கு,  திருவெண்ணெய்நல்லுாருக்கு வந்தார். அவரை, கோவிலின் பட்டாச்சாரியார்கள் பாஸ்கர், சவும்ய நாராயணன், பிரகாஷ் ஆகியோர், பூரண கும்ப  மரியாதை கொடுத்து வரவேற்றனர். பின், கோவிலுக்கு வந்த ஜீயர் சுவாமிகள், மங்களாசாசனம் செய்து, பொதுமக்களுக்கு உபன்யாசம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !