உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாங்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!

நல்லாங்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!

திருத்தணி: படிகள் உடைந்து, தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசும் நல்லாங்குளத்தை, முறையாக பராமரித்து சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி  அடுத்த, மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளத்தை, நகராட்சி  நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆண்டு÷ தாறும் முருகன் கோவிலில் நடக்கும் ஆடி  கிருத்திகை திருவிழாவின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள்  காவடிகள் எடுத்து வந்து, இக்குளத்தில் நீ ராடிய பின், மலைக் கோவிலுக்கு  சென்று வழிபடுவது வழக்கம். நகராட்சி நிர்வாகம், இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது  குளத்தின் படிகள் உடைந்துள்ளன. சமூக விரோதிகள், மதுவை குடித்துவிட்டு, பிளாஸ்டிக் டம்ளர்,  வாட்டர் பாக்கெட்டுகளை குளத்திற்குள் வீசி வ ருகின்றனர். சிலர்,  குளத்தில் துணிகள் துவைப்பதாலும், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம்  வீசுகிறது. இதனால், நீராட வரும் பக்தர்கள், முகம்  சுளிக்கும் நிலை  ஏற்பட்டு உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நல்லாங்குளத்தை முறையாக பராமரித்து சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் ÷ காரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !