உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பரை ஏமாற்றியவர்களின் நிலம் கோர்ட் உத்தரவின் பேரில் மீட்பு

நெல்லையப்பரை ஏமாற்றியவர்களின் நிலம் கோர்ட் உத்தரவின் பேரில் மீட்பு

திருநெல்வேலி :நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான 1.88 ஏக்கர் விவசாய நிலம் கோர்ட் உத்தரவின் பேரில் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் பொதுமக்களிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு மிகக்குறைந்த அளவிலான நெல்லை, கோயிலுக்கு கட்டணமாக செலுத்தும்விதமாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் கோயிலுக்கு கட்டணமோ, நெல்லோ செலுத்தாமல் ஆண்டுக்கணக்கில் அனுபவித்து வருகின்றனர். நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞநாராயணன், இத்தகைய பாக்கிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்டுவருகிறார். நெல்லையை அடுத்துள்ள சேந்திமங்கலத்தில் நெல்சாகுபடி நடக்கும் நன்செய் நிலம் சுமார் ஒரு ஏக்கர் 88 சென்ட், பிச்சைமுருகன், சண்முகத்தம்மாள் ஆகியோர் வசம் இருந்தது. பல ஆண்டுகளாக குத்தகை தொகையையோ, கட்டணத்தையோ நெல்லையப்பர் கோயிலுக்குசெலுத்தவில்லை. இதுதொடர்பாக வருவாய்கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், நிலத்தை மீட்கும்படி வருவாய் நீதிபதி தாமஸ் பிரிட்டோ உத்தரவிட்டார். இதன்படி நேற்று நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு பலகை வைக்கப்பட்டது.நெல்லை தாசில்தார் மற்றும் போலீசார் கண்காணிப்பில் மீட்பு பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !