சூரக்குண்டு கிராமத்தில் மழைக்காக 200 கிடாக்கள் வெட்டு
ADDED :3657 days ago
மேலுார் : மேலுார் அருகே சூரக்குண்டு கிராமத்தில், சின்னடைக்கி, பெரியடைக்கி மற்றும் ஆண்டி அரசு மகன் கோயில் உள்ளது. மழை பெய்து விவசாயம் செழிக்க புரட்டாசி மாதம் கோயிலில் விழா நடக்கும். இதை முன்னிட்டு மக்கள் விரதமிருந்தனர்.குளத்தில் தண்ணீர் எடுத்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பெண்கள் நடந்து வந்தனர். அங்கு 200க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கினர்.