உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியதச்சூர் பிரத்தியங்கரா பீடத்தில் யாக பூஜைகள்!

பெரியதச்சூர் பிரத்தியங்கரா பீடத்தில் யாக பூஜைகள்!

விழுப்புரம்: நவராத்திரியை முன்னிட்டு பெரியதச்சூர் பிரத்தியங்கரா பீடத்தில் உலக நன்மை வேண்டி யாகபூஜைகள் நடக்கிறது. பெரியதச்சூர் பிரத்தியங்கரா பீடத்தில் உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி  யாகபூஜைகள் நடக்கிறது.  இதையொட்டி வரும் 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 10:00 மணிக்கு யாகபூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 13ம் தேதி காலை 8:30 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ரகுநாதஜீ தலைமையில்  நவதுர்கா யாகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரத்தியங்கரா வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !