புரட்டாசி ஸ்பெஷல்: 16, 17ல் ஆன்மிக சுற்றுலா!
சென்னை:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ஸ்ரீரங்கம் மற்றும் ஒரு நாள் நடுநாட்டு திருப்பதிகள் சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது.ஸ்ரீரங்கம் சுற்றுலாவில், திருவானைக்கோவில், அழகிய சிங்க பெருமாள் கோவில் (காட்டு அழகிய சிங்கர்), ஸ்ரீரங்கநாதர் சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களுக்கு, சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவர். இச்சுற்றுலா வரும், 16ம் தேதி இரவு, 10:00 மணிக்கு துவங்கி, மறுநாள் இரவு, 10:00 மணிக்கு சென்னையில் முடிவடையும். குளிர்சாதன பஸ் கட்டணம் ஒரு நபருக்கு, 1,900 ரூபாய்.ஒரு நாள் நடுநாட்டு திருப்பதிகள் சுற்றுலாவில், பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர், திருவந்திபுரம் தெய்வநாயக பெருமாள், ஹயக்ரீவப் பெருமாள், திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் ஆகிய கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுவர். இச்சுற்றுலா வரும், 17ம் தேதி காலை, 6:00 மணிக்கு துவங்கி, இரவு, 9:00 மணிக்கு சென்னையில் முடியும். குளிர்சாதன பஸ் கட்டணம் ஒரு நபருக்கு, 990 ரூபாய். இரண்டிலும், ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. 2533 3444; 2533 3333 மற்றும் கட்டணமில்லா எண் 1800 4253 1111 ஆகியவற்றில் விவரம் அறியலாம்.