உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோயிலில் 2 ஆயிரம் பழங்களில் அலங்காரம்!

சித்தி விநாயகர் கோயிலில் 2 ஆயிரம் பழங்களில் அலங்காரம்!

திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 2 ஆயிரம் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடந்தது. உறியடி கிருஷ்ணன் அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார்.திருப்பரங்குன்றம் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலில், திருப்பதி வெங்கடாசலபதிக்கு சிறப்பு அலங்காரமாகி அருள்பாலித்தார். வீர ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்தார். சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக, பூஜை நடந்தது. மலைக்கு பின்புறமுள்ள பால்சுனை கண்ட சிவபெருமான், மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் மூலவர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !