உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை அம்பாள் கோவிலில் சனி பிரதோஷ விழா

குளித்தலை அம்பாள் கோவிலில் சனி பிரதோஷ விழா

குளித்தலை : குளித்தலை அருகே, ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோவிலில் சனி பிரதோஷ விழா நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, கோவிலில் சிவபெருமான் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, மஞ்சள் உட்பட அனைத்து வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு எள் சாதம், சுண்டல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார், வேதரத்தினசிவம் குருக்கள் ஆகியோர் பூஜைகளை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !