முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் நாளை நவராத்திரி!
மயிலாப்பூர்: மயிலாப்பூர், முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா, நாளை துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. 11 நாட்களும், மூலவருக்கு நண்பகல், 12:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்க உள்ளது. தினமும், மங்கள வாத்தியங்கள், தேவார இன்னிசை, பாராயணங்கள், சமய சொற்பொழிவுகள், பத்தி பாடல்கள், பரதநாட்டியம் நடத்தப்பட உள்ளன. அஷ்டலட்சுமி கோவிலில், நாளை துவங்கும் நவராத்திரி திருவிழா, 21ம் தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, தினமும் ஸ்ரீசுத்த ஆராதனை நடக்க உள்ளது. தினமும் மாலை, 4:00 மணிக்கு, அஷ்ட லட்சுமிகளுக்கும் மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. ஸ்ரீனிவாசர், பத்மாவதி தாயார் நவராத்திரி தொடர்புடைய அலங்காரங்களில் உள்புறப்பாடு செய்து, ஊஞ்சல் சேவையில் அருள் பாலிக்கின்றனர். விஜயதசமி அன்று, பார்வேட்டைக்கு சென்று அம்பு எய்யும் உற்சவம் நடக்கிறது.