உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாளை நவராத்திரி இரண்டாம் நாள்!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாளை நவராத்திரி இரண்டாம் நாள்!

மதுரை: மீனாட்சியம்மன், நவராத்திரி இரண்டாம் நாளில், அன்னபூரணியாக காட்சி தருகிறாள்.
உயிர்கள் வாழ்வதற்கு உணவு அவசியம். அதை அருளும் அம்பிகையாக அன்னபூரணி
விளங்குகிறாள்.

அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று உணவை வேதம் வர்ணிக்கிறது. நாட்டுப்புற
மக்கள் இதனை, சோற்றுக்குள் இருக்கிறார் சொக்கநாத சுவாமி என்று சொல்வர். அன்னத்தின்
சிறப்பை உணர்த்தும் அன்னபூரணி வழிபாடு, காசியில் சிறப்பாக விளங்குகிறது.

கையில் பால் சோற்றுப் பாத்திரமும், அன்னக் கரண்டியும் ஏந்தி, காசியில் அன்னபூரணி
காட்சியளிக்கிறாள். அங்கு அவளை தரிசிக்கும் பலனை மதுரையிலேயே அடையும் விதத்தில், அன்னை மீனாட்சியே அன்னபூரணியாக நாளை காட்சியளிக்கிறாள். குவளைத் தரிசித்தால்குறைவில்லாத உணவும், நல்ல உணர்வும் உண்டாகும் என்பது ஐதீகம்.

நைவேத்யம்:
புளியோதரை, பால்சாதம், சுண்டல், தயிர்வடை.

பாடல்:
இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !