புதுச்சேரி மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
ADDED :3754 days ago
புதுச்சேரி: மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய, அமாவாசை தினங்களில், திதி கொடுப்பது வழக்கம். மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது குடும்பத்திற்கு நல்லது. திதி கொடுக்க மறந்தவர்கள், இந்த மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர். அந்த வகையில் மகாளய அமாவாசை தினமான நேற்று, புதுச்சேரி கடற்கரை, குருசுக்குப்பம் கடற்கரைப் பகுதி, வேத புரீஸ்வரர் கோவில் குளக்கரை உட்பட பல இடங்களில் முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் கொடுத்தனர்.