உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை நவராத்திரி விழா ஈஷாவில் இன்று துவக்கம்!

கோவை நவராத்திரி விழா ஈஷாவில் இன்று துவக்கம்!

கோவை: வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள, ஈஷா மையத்தில் நவராத்திரி திருவிழா இன்று துவங்குகிறது.

ஈஷா மையத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான விழா இன்று துவங்கி, அக்., 21ல் நிறைவடைகிறது. லிங்கபைரவிக்கு, முதல்
மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரமும், அடுத்த மூன்று நாட்கள் சந்தன அலங்காரமும், இறுதி நாட்கள் குங்கும அலங்காரமும் செய்யப்படுகின்றன. தேவிக்கு நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம்; மாலைதோறும் மஹா ஆரத்தி, ஊர்வலம் மற்றும் சிறப்பு மந்திர உச்சாடனைகள் நடக்கவுள்ளன. அதேசமயம், தேவியின் பலவித ரூபங்கள் அடங்கிய கொலுகண்காட்சியும் இடம்பெறுகின்றன. மேலும், பல்வேறு கலைஞர்களின் இசைக்கச்சேரி,
பரதநாட்டியம், குச்சிபுடி, கரகம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தினமும் மாலை, 5:30 முதல் 7:00 மணி வரை நடக்கிறது. இரவு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !